Skip to main content
Srishti-2022   >>  Poem - Tamil   >>  விதவை தாய்

விதவை தாய்

நதியின் ஒரு கரையின் ஓரத்தில்-

குழப்பம் இருள் சூழ ,

தனிமையில் வீற்றிருந்தாள்!

 

சேலை வைத்து மறைத்த உருவமொன்று-

அவள் இடுப்பினில் கணகணக்க,

வாழ்வில் இனியாவது நல்லதொன்று நேருமென்று 

எண்ணியே நெகிழ்ந்திருந்தாள்.

 

"வெறும் கஞ்சிக்கிங்கு வழியில்ல,

கண் சொருக நேரமில்ல...

காட்டுக்குள் மாடு மேய்ப்பவளுக்கு-

இது ஒன்றும் புதிதல்ல! "

 

வெறிச்சோடி நின்றவளை,

மாலை காற்று தழுவி அணைக்க,

சிவந்த கண்களின் நீரை-

வெகு நேரம் ஆரவிட்டாள்.

 

"கையில் அஞ்சு காசு இல்ல,

பிள்ளைக்கு கொடுக்க உணவுமில்ல,

நித்தமும் பசியோடு போரிட்டவளுக்கு - 

கண்ணீருக்கு பஞ்சமென்ன 

அவள் தெய்வமும் தான் மறந்ததென்ன!"

 

தாயின் சோகம் புரிந்தவனாய்,

புன்னகைத்து அவள் மார்போடு அணைத்துக்கொள்ள,

புன்னகை சாயத்தை பூசிக்கொண்டு 

தன்னம்பிக்கையோடு புறப்படுகிறாள்...

 

மறு கரை சேர்ந்தாவது-

பழம் கசப்பு மறையுமென்று 

நினைத்தவளாய் நடைபோடுகிறாள் -