Kripa K B
EY Kinfra
சாலையோர காட்சி
பெருகிய வயிறுடன் , கிழிந்து தொங்கும் சேலையும்
பர பர தலயும் உளறும் பேச்சும் ,
பசி துடிக்கும் கண்களும் ,
சாலையோரம் சோலை தேடிய என் கண்களில் விழுந்த காட்சி.
அறிவுரை சொல்லும், ஆழ்ந்த சிந்தனையும் இவளுக்கில்லை,
புரிதல்களும் இல்லை , அவளிடம் புரட்சிகளுமில்லை.
பிள்ளை வேண்டாமா என புலம்பும் குடும்பமுமில்லை
குடும்பக்கட்டுப்பாடும் இவளுக்கில்லை.
உந்திய வயிறுடன் உருகும் வெயிலில் இவளைகான,
அனுதாபம் கூறும் சிலர்,
பிள்ளை இவளுக்கெதுக்கு புலம்பும் சிலர்,
அவள் வரண்ட உதடை கண்டு உதடை நனைப்பவரும் சிலர்,
தொலைபேசியில் கண்கட்டி இருப்பதால் கவனிக்காதும் சிலர் .
நொடி நேரம் சிலர் சிந்தனையில் வந்த அவளுக்கோ ,
உணவுக்கு என்ன செய்வதென்று ஒரே சிந்தனை
சிகப்பு நிறமோ மறைந்தது , சாலையில் வாகனங்கள் நகர்ந்தது
நொடிகளும் மறைந்தது , அத்துடன் அவளும்